கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம்
Missing Persons
Kilinochchi
SL Protest
Northern Province of Sri Lanka
By Laksi
கிளிநொச்சியில் (Kilinochchi) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (25) காலை 10.00 மணியளவில் கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்த போராட்டம் அரை மணித்தியாலயங்கள் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணை தேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (24) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




