ஊடகங்களை அடக்கி எமது போராட்டங்களை நசுக்கும் நோக்கமே சிறிலங்கா அரசின் புதிய சட்டம்!

Tamil Media Missing Persons Sri Lanka SL Protest Sri Lanka Prevention of Terrorism Act
By Kalaimathy Apr 04, 2023 12:40 PM GMT
Report

சிறிலங்கா அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“இந்த அரசாங்கம் தற்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை உருவாக்க முயல்கின்றது. இந்த புதிய சட்டத்தால் எங்களுடைய ஜனநாயக ரீதியான போராட்டம், நீதி கோருகின்ற பேரணிகள், ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் சுயாதீனமாக இயங்குகின்ற ஊடகங்கள் கூட எமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வர முடியாத அளவிற்கு குறித்த சட்டம் அமையப்போவதாக நாங்கள் அறிகின்றோம்.

ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கம்

ஊடகங்களை அடக்கி எமது போராட்டங்களை நசுக்கும் நோக்கமே சிறிலங்கா அரசின் புதிய சட்டம்! | Missing Persons Protest Anti Terrorism Act Press

வடக்கு கிழக்கிலே வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழர்களிற்கும் ஆபத்தான சட்டமாக தான் நாங்கள் பார்க்கின்றோம். இந்த சட்டத்தை வர்த்தமானி ஊடாக அரசாங்கம் கொண்டுவருவதற்கு முயன்றால் அதனை நாங்கள் எதிர்ப்போம். பாதிக்கப்பட்ட தாய்மாராகிய எமக்கு இதுவரை நீதி கிடைக்காத போதும், நாங்கள் சர்வதேசத்தின் ஊடாக நீதி வேண்டி நிற்கின்றோம்.

இலங்கை அரசினால் ஒருபோதும் எங்களிற்கான நீதி கிடைக்கப்போவதில்லை. ஒட்டுமொத்தமாக வட கிழக்கு தழிழர்களிற்கான சுய உரிமையும் கிடைக்கப்போவதில்லை. தமிழ் அரசியல்வாதிகளும், ஏனைய சிங்கள அரசியல்வாதிகளும் இந்த சட்டத்தை எதிர்த்து இல்லாது ஒழிக்க வேண்டும் என கேட்டு நிற்கின்றோம்.

அரசாங்கம் எக்காரணம் கொண்டும் குறித்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இதற்கு எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்க இருக்கின்றோம். உண்மையாக எமது நியாயமான போராட்டங்களை நசுக்குவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருகின்றார்கள். ஆகையால் இந்த சட்டத்தை வன்மையாக கண்டிகின்றோம்.

போராட்டங்களை நசுக்கும் திட்டம்

ஊடகங்களை அடக்கி எமது போராட்டங்களை நசுக்கும் நோக்கமே சிறிலங்கா அரசின் புதிய சட்டம்! | Missing Persons Protest Anti Terrorism Act Press

இதை யாருமே ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாடாளுமன்றம் செல்கின்றவர்கள், அங்கு பேசுபவர்கள், சகோதர இனத்தவர்கள் கூட இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஜனநாயக ரீதியில் இடம்பெற்ற எமது போராட்டங்களை ஊடக வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம்.

இங்கே இன அழிப்பு செய்யப்பட்டமை, லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விடயங்களைக் கூட சமூக வலைத்தளங்கள் ஊடாக தான் சர்வதேச மட்டத்திற்கு வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம். இந்த சட்டம் நடைமுறைக்கு வருமாக இருந்தால், ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் முடக்கி அவர்கள் எம்மோடு பயணிக்க முடியாத அளவிற்கு இந்த சட்டம் கொண்டு வரப்படும் என நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

இப்படியான விடயங்களை அவர்கள் வெளிக்கொண்டு வரும்போது, அவர்களை கைது செய்து மரண தண்டனைக்குள்ளாக்குகின்ற விடயங்கள் கூட நடக்கும் என்று நாங்கள் அறிகின்றோம். ஆகவே தான் நாங்கள் இதை முற்றாக நிராகரிக்கின்றோம்.

சர்வதேச ரீதியான போராட்டம்

ஊடகங்களை அடக்கி எமது போராட்டங்களை நசுக்கும் நோக்கமே சிறிலங்கா அரசின் புதிய சட்டம்! | Missing Persons Protest Anti Terrorism Act Press

நாங்கள் சர்வதேச மட்டத்தில் போராடிக்கொண்டிருக்கின்ற போது, அரச கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற தொழிற்சங்கங்கள் கூட எமது நீதிக்கான போராட்டங்களில் கலந்து கொள்கின்றார்கள்.

அவ்வாறு கலந்து கொள்பவர்களும் கைது செய்யப்பட்டு தண்டனைக்குட்படுத்துவார்கள் என பேசப்படுகின்றது. அதனாலே தான் உயிருக்கு மேலாக கருதி முன்னெடுக்கும் எமது போராட்டத்தை நசுக்குவதற்காக ஒட்டுமொத்த தமிழர்களையும் அழித்து இல்லாது ஒழிப்பதற்காகதான் இந்த அரசாங்கம் முற்படுகின்றது. ஆகவேதான், இந்த சட்டத்தை கொண்டுவர முனைப்பெடுக்கின்றது, இதை நாங்கள் முற்றாக நிராகரித்து கண்டிக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023