கஜ்ஜா மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் கைது
மித்தெனிய கஜ்ஜாவின் உயிரிழப்பு தொடர்பில் தேடப்பட்டு வந்த அச்சினி என அழைக்கப்படும் அனுஷா லக்மாலி கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அனுஷா லக்மாலி ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிதெனிய, கட்டுவனாவைச் சேர்ந்த 34 வயதான இந்தப் பெண்ணுக்கும், கொலை செய்யப்பட்ட 'கஜ்ஜா' என்பவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
கடைசி தொலைபேசி அழைப்பு
கஜ்ஜா கொலை செய்யப்பட்ட நேரத்தில், அவருக்கு கடைசி தொலைபேசி அழைப்பையும் குறுஞ்செய்தியையும் அனுப்பியவரும் இந்த சந்தேக நபர்தான் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

'பாக்கோ சமன்' என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், அவர் 'கஜ்ஜா' மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் குறிப்பிட்ட அந்த உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக திட்டமிட்டு அழைத்துச் சென்றதும் மேலும் தெரியவந்துள்ளது.
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
கஜ்ஜா என்ற அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில அனுஷா லக்மாலி சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |