சிறிலங்கா கடற்படைக்கு எதிராக மோடிக்கு அழுத்தம் கொடுத்த ஸ்டாலின்!
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கு தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது
“தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைதுசெய்து வருவது கவலை அளிக்கிறது.
படகுகள் தேசியமயமாக்கப்பட்டிருத்தல்
கடந்த இரண்டு மாதங்களில் 69 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கைதுகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
மேலும் கவலையளிக்கும் விடயம் என்னவென்றால் மூன்று கடற்றொழிலாளர்களை அநியாயமாக தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்று முத்திரை குத்துவது அவர்களை நீண்ட காலம் சிறையில் வைப்பதற்கு வழிவகுத்துள்ளது.
இந்நிலையானது எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டிருப்பதால் அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இராஜதந்திர ரீதியில் தலையீடு
தமிழக மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இராஜதந்திர ரீதியில் தலையீடு செய்து நமது கடற்றொழிலாளர்களை திருப்பி அனுப்புவதையும் அவர்களின் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
இந்த விடயத்தை முதன்மைப்படுத்தி நமது கடற்றொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம் ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல பெருமைமிக்க இந்தியர்கள்” என பதிவிட்டுள்ளார்.
The continuous apprehension of Tamil Nadu fishermen by Sri Lankan Navy is deeply concerning. Over the past two months, there has been a sharp rise in arrests, with a staggering 69 fishermen apprehended. What's more alarming is the unjust branding of three fishermen as habitual… https://t.co/zgTCfVJuni
— M.K.Stalin (@mkstalin) February 18, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |