காலி சிறைச்சாலையில் விசேட சோதனை: மீட்கப்பட்ட 25 தொலைபேசிகள்
Galle
Smart Phones
Prison
By Pavi
காலி சிறைச்சாலையில் கைதிகளின் தங்குமிடங்களை சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண் மற்றும் பெண் கைதிகள் தங்கியிருக்கும் அறைக்கட்டிடங்ளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் சிறைச்சாலை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலி சிறைச்சலை
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை தலைமையக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்