யாழில் பிறப்புச் சான்றிதழ் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Raghav
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டச் செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் (Maradalingam Pradeepan) அறிவித்துள்ளார்.
அதன்படி, நாளை (10.12.2024) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணிவரை பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ்
இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை மூலம் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், இதுவரை பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளாதவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்று பயனடையுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி