சற்றுமுன் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Schools
Education
School Holiday
By Thulsi
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இன்று (02.12.2025) கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி
எனினும், நாட்டின் நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு, பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால், அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அவைகள் மீள திறக்கும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |