ஆசிரியர் இடமாற்றத்தில் பழிவாங்கல்கள் - எம்.பிக்களிடம் முறையிட்ட சங்கம்
புதிய இணைப்பு
இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று இரண்டவது நாளாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இன்றைய போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மாற்றும் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) ஆகியோர் கலந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.
முன்பதாக ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதுடன் அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காக செயற்படுவதை நிறுத்துமாறும் கோரியே தாம் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
செய்திகள் - பிரதீபன்
முதலாம் இணைப்பு
ஆளுநரே என் பி பி அரசாங்கத்துக்கு நீ அடிமையா என இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் (14) காலை வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் இடமாற்றக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு கோரியும் அரசியல் தலையீடுகளை உடன் நிறுத்துமாறு இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரசியல் தலையிட்டை நிறுத்து
வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான வசனங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆசிரியர் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
' ஆளுநரே என் பி பி அரசாங்கத்துக்கு நீ அடிமையா'', '' வடக்கு மாகாண கல்வியில் அரசியல் தலையிட்டை நிறுத்து'' , போன்ற வசனங்களை தாங்கிய பதாகைகளை ஆசிரியர்கள் ஏந்தியுள்ளனர்.
தொடர்ந்து குடும்பத்தை விட்டு வெளி இடங்களில் சேவையை முன்னெடுப்பதால் ஆசிரியர்களின் குடும்பங்கள் பிரியும் நிலையும் உருவாகி வருவதாக ஆசிரியர்கள் சுட்டிக்கட்டியுள்ளார்.
