புதிய கல்வி சீர்திருத்தம்: எம்.பிக்களுக்கு பாடம் எடுத்த பிரதமர்
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஹரிணி அமரசூரியவின் (Harini Amarasuriya) தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன உட்பட, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோர் உட்பட கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள் மற்றும் புதிய முன்மொழிவு
இதன்போது, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன் நோக்கங்கள் மற்றும் இலக்குகள், சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டும் கொள்கைகள்.
மற்றும், புதிய சீர்திருத்தங்களுக்கு ஏற்ப கல்வியின் முக்கிய தூண்கள், பாடத்திட்ட சீர்திருத்தம், சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் (NIE) மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு மூலம் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் கண்காணிக்கப்படும் விதம் தொடர்பாகவும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டன.
கல்வி சீர்திருத்தங்கள் குறித்த அடிப்படை விளக்கத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சீர்திருத்தங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
