ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு நேர்ந்த விபரீதம்
விவசாய இராஜாங்க அமைச்சரும் மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஷிந்திர ராஜபக்ச பயணம் செய்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (21) மாலை 6.45 மணியளவில் பிபிலவில் உள்ள மெதகம பகுதியில் நடந்த பல நிகழ்வுகளில் கலந்துகொண்டபின்னர் பலத்த மழையின் மத்தியில் இராஜாங்க அமைச்சர் மொனராகலவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இதன்போது இராஜாங்க அமைச்சரும் வாகனத்தில் இருந்துள்ளார்.
அவ்வேளை பப்பரா ஓயா ஆற்றைக் கடந்தவேளை கரைபுரண்டோடிய வெள்ளத்தில் அகப்பட்டு வாகனத்துடன் அமைச்சரும் அடித்துச் செல்லப்பட்டார். பாலத்திற்கு கீழே 10 மீற்றர் தொலைவில் பப்பரா ஓயாவில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டதோடு, சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அமைச்சரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மொனராகலவின் சிரிகாலவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அமைச்சருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சசிந்திர ராஜபக்ச அமைச்சர் சமல் ராஜபக்சவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.