வெளிநாட்டு மோகம் காட்டி பணமோசடி! சிக்கய சந்தேகநபர்
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கடிதத் தலைப்புகளை போலியாக உருவாக்கி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்து மோசடியாக பணம் பெற்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கீழ் நிறுவப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினால் சந்தேக நபர் குறித்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி இந்த கைது முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து பல போலி கடிதத் தலைப்புகள், சுயவிபரக் குறிப்புகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் நகல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலை
ராஜகிரிய, மொரகஸ்முல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கைது செய்யப்பட்ட 38 வயதுடைய சந்தேக நபர் கண்டி - பிலிமத்தலாவை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

புதுக்கடை எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபர் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |