கனடா அனுப்புவதாக பணமோசடி செய்த நபர் விளக்கமறியல்
Canada
By Shadhu Shanker
கனடா அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட காத்தான்குடியைச் சேர்ந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களிற்கு முன்னர் பளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளம் ஊடாக வந்த விளம்பரம் ஒன்றில் அறிமுகமாகி கனடா செல்வதற்காக பத்து லட்சம் வைப்பிலிட்டுள்ளார்.
அதன் பின் நீண்ட நாட்கள் ஏமாற்றி வந்ததால் கொடிகாமம் காவல்துறை ஊடாக யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு மேற்கொண்டார்.

சந்தேகநபர் கைது
விசாரணைகளை மேற்கொண்ட யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினர் காத்தான் குடியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான 57 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவானிடம் முற்படுத்தினர்.
இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மரண அறிவித்தல்