புற்று நோய் சிறுவர்களின் புகைப்படங்களை வைத்து பெரும் மோசடி! மூவர் அதிரடி கைது
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சிறுவர்களின் புகைப்படங்களை மோசடியாகப் பெற்று முகப்புத்தகத்தில் வெளியிட்டு லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு நவீன கையடக்க தொலைபேசிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெற்றொரின் முறைப்பாடு
கடவத்தை, ஜாஎல மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களின் சட்டப்பூர்வ பெற்றோர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு புலனாய்வுப் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நீண்ட விசாரணையைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோசடி செய்த விதம்
இந்த நிலையில், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் பல்வேறு மத மையங்களுக்கு சென்ற புகைப்படங்களையும் மோசடியாக பெற்று, “தங்கள் குழந்தைகள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து, தயவுசெய்து என் குழந்தைக்கு உதவுங்கள்.
என் மகனின் வயதுடைய மற்ற குழந்தைகள் பாடாசாலை சென்று விளையாடுகிறார்கள். ஆனால் என் மகன் படுக்கையில் படுத்து கஷ்டப்படுகிறான்" போன்ற பல்வேறு சொற்றொடர்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் உணர்வுகளைப் தூண்டும் வகையில், இந்த மோசடியை சில காலமாகச் செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
