குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை பிடிக்கும் காவல்துறை அதிகாரிக்கு கிடைக்கவுள்ள சன்மானம்
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு ஓட்டுநருக்கு ரூ.5,000 என்ற அடிப்படையில் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இது டிசம்பர் இறுதி வரை மூன்று மாதங்களுக்கு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும் என காவல்துறை போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்துகளை தடுக்கும் வகையில்
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு சலுகைகள் காரணமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதில் காவல்துறை அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும்போது, அவர்கள் குடிபோதையில் இருப்பதை உறுதி செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அபராதம் விதிக்க வேண்டும்.