இலங்கையில் கடந்த வருடத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழப்பு : ஆய்வில் வெளியான தகவல்

Sri Lanka Economic Crisis University of Peradeniya Sri Lanka Sri Lanka Electricity Prices
By Sathangani Oct 21, 2023 07:55 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையில் ஏறக்குறைய 2000 தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு (2022)  5 இலட்சத்து 33 ஆயிரத்து 858 பேர் வேலையை இழந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

அதன்படி, இவ்வாறு வேலையை இழந்தவர்களுள் தொழில்துறையைச் சேர்ந்த 3 இலட்சத்து 96 ஆயிரத்து 159 பேரும் சேவைத் துறையில் 1 இலட்சத்து 37ஆயிரத்து 699 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தில் தனி நபர்களின் வேலை நேரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பின் கோரமுகத்தை அம்பலமாக்கும் ஹமாஸ் அமைப்பின் வாரிசு

ஹமாஸ் அமைப்பின் கோரமுகத்தை அம்பலமாக்கும் ஹமாஸ் அமைப்பின் வாரிசு


இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரிப்பு

கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் 66.1 வீதமானவர்கள் 40 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்த போதிலும் அதே வருடத்தின் நான்காம் காலாண்டில் 40 மணித்தியாலங்கள் மற்றும் அதற்கு மேல் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை 61.7 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வருடத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழப்பு : ஆய்வில் வெளியான தகவல் | More 5 Lakh People Were Unemployed In Sl Last Year

இதற்கிடையில், அதே ஆண்டில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 51.2 வீதத்திலிருந்து 48.9 வீதமாகக் குறைந்துள்ளதுடன் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை 14.2 வீதத்திலிருந்து 17.2 ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், தொழிற்சாலைகள் மூடப்பட்டமைக்கான கரணங்களாக மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றை நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரை தெரியுமா..! தகவல் அளித்தால் 25 இலட்சம்

இவரை தெரியுமா..! தகவல் அளித்தால் 25 இலட்சம்


ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025