கனேடிய வேலைவாய்ப்பு மோகம் காட்டி லட்சக் கணக்கில் மோசடி! பெண்கள் உட்பட மூவர் அதிரடி கைது
Sri Lanka Police
Sri Lankan Peoples
Canada
By Dilakshan
கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றியதாக மூன்று சந்தேக நபர்கள் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகளால் நேற்று (25) போலி விசா ஸ்டிக்கருடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரளையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், கோனகங்கார மற்றும் பொரளைப் பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களும் ஆவர்.
லட்சக் கணக்கில் மோசடி
கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி, ஒரு பெண் சந்தேக நபர் ரூ. 3,831,000 மற்றும் ரூ. 3,436,000 மோசடி செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இதேபோன்ற பிற மோசடிகளில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

