பருத்தித்துறையில் கனரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு! எடுக்கப்பட்டுள்ள முடிவு
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் முன்வீதி கனரக வாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் காலை 9:45 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் மண்ணிற்க்காக மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
கட்டுப்பாடுகள்
இந்த அமர்வில் போதே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் முன்வீதியால் கனரக வாகனங்கள் செல்வது தடை செய்வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பாடசாலை நேரங்களில் மாணவர்கள் பாடசாலை செல்லும் மற்றும் வெளியேறும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வடமராட்சி கிழக்கு உடுத்துறை மற்றும் ஆழியவளை பகுதிகளில் அனுமதியின் அமைக்கப்பட்டுள்ள அலைக்கதிர் ஊக்கி newswork booster கோபுரங்கள் அமைப்பதை நிறுத்தியுள்ளதாகவும் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.
ஏனைய தீர்மானங்கள்
இதேவேளை, பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்ற தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்குதல், மற்றும் காணிகளை சுவீகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதென்றும், தொடர்ந்து நிதிக்குழு கூட்ட அறிக்கை சபையில் ஆராயப்பட்டு பல்வேறு நிதிக் கொடுப்பனவு அங்கீகார தீர்மானங்களும், வறுமைக்கோட்டிற்குட்பட்ட நூறு மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதென்றும், பருத்தித்துறை நகரசபையால் பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை தரம்பிரித்து வழங்காமையால் இம்மாதத்துடன் பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் கழிவு கொட்டுவதை நிறுத்துவதென்றும் அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மருதங்கேணி சந்தி பகுதியிலுள்ள ஓய்வகத்துடன் கூடிய மதுபான நிலையத்திற்க்கான இதுவரை காலமும் செலுத்தாமலுள்ள நிலையில் அதனை முழுமையாக பெற்றுள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போக்கறுப்பு பகுதியில் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற ஓய்வகத்துடன் கூடிய மதுபான விற்பனை நிலையத்திலிருந்தும் இதுவரை வரி எதுவும் செலுத்தவில்லை எனவும் அதனையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பாலூட்டும் தாய்வருக்கான அன்பளிப்பு வழங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்றைய சபை அமர்வில் 20 உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்