மூட்டு வலியால் கஷ்டப்படுகிறீர்களா? வைத்தியர் தரும் ஆலோசனை
மூட்டுகளில் ஏற்படும் வலி என்பது மனிதர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சாதாரணமாக ஒரு மூட்டில் ஏற்படும் வலியே எமது இயக்கத்தை, மன தைரியத்தை பாதிப்படையச் செய்து விடுகிறது.
இவ்வாறு இருக்கையில் உடலில் இருக்கும் ஒவ்வொரு மூட்டுகளிலும், சிறு அசைவுகளிலும் கடுமையான வலியும் வீக்கமும் ஏற்பட்டால் எம்மால் தாங்கி கொள்ள முடியுமா?
இப்படி பாதிப்பை ஏற்படுத்தும் நோயை தமிழில் வாத ரத்தம் என்று சொல்வார்கள்.
இந்த நோய் ஏற்பட்டால் உடலில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகள் உடலில் இருந்து வெளியேறாமால் - மூட்டுகளுக்கு இடையே சென்று சேர்ந்து மூட்டுகளில் வலியையும், வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த நோயை எப்படி தீர்ப்பது? இதற்கு இயற்கை மருந்துகள் தீர்வாகுமா? எனும் கேள்விகளுக்கு தான்றிக்காய் கசாயம் அருமருந்தாய் இருக்கிறது என்கிறார் வைத்தியர் கௌதமன்,