வானில் நிகழவுள்ள மாற்றம் : இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
Sri Lanka
SpaceX
World
By Shalini Balachandran
சூரிய குடும்பத்தில் மிக அழகான வளையம் கொண்ட கோளாக கருதப்படும் சனி வானில் இருந்து மறையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த நிகழ்வானது இன்று (24) இரவு இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி கிரகணம்
சந்திரனை சனி பார்ப்பதால் இவ்வாறு நிகழ்வதாகவும் இது ஒரு வகையில் சனி கிரகணம் போன்றதெனவும் இந்த நிகழ்வு மிகவும் அரிதானதெனவும் வானியலாளர்கள் விளக்கியுள்ளனர்.

இதனடிப்படையில், இந்த நிகழ்வை அதிகாலை 2.10 மணி வரை இலங்கையர்கள் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்