மொரட்டுவையில் நடந்தது ஒரு அசிங்கமான சம்பவம்! ஜனாதிபதி அதிருப்தி
corona
sri lanka
people
By Shalini
கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக அறிவியல் ரீதியாகவே பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் மொரட்டுவ பகுதியில் மக்களுக்கு தடுப்பூசி போட சென்ற மருத்துவர்கள் குழுவுக்கும், மேயருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டார்.
இன்று (28) நடைபெற்ற சிறப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
“நாங்கள் தடுப்பூசி தளத்தை விஞ்ஞான ரீதியாகத் தேர்ந்தெடுத்தோம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேவையான பகுதிகளை நாங்கள் தேடினோம்.
அப்படியிருந்தும், நேற்று ஒரு அசிங்கமான சம்பவம் இடம்பெற்று முழுத் திட்டமும் பாழடைந்தது.” என்றார்.
இதற்கு பதிலளித்த நாமல், “நான் அதைப் பற்றி வருந்துகிறேன். இது ஒரு தற்செயல் நிகழ்வு" என்றார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்