இலங்கையில் 9 ஆண்களும் 9 பெண்களும் உயிரிழப்பு
corona
sri lanka
death
people
By Shalini
இலங்கையில் நேற்றைய தினம் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,034 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 பெண்களும் 9 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.