இன்று மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!
isolated
sri lanka
people
By Shalini
இன்று காலை 4 மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மாத்தறை மாவட்டத்தில்
உயன்வத்த, உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில்
வலகம்பாய கிராம சேவகர் பிரிவில் கொஸ்கஸ்தன்ன பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் ரத்தோட்டை பொாலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட உடஹவிட்ட ஆகிய கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் மெதகிரியான கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குருணாகல் மாவட்டத்தில் நிகதலுபொத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்