மிகவும் ஆபத்தான, காற்றில் பரவக்கூடிய, 5 - 6 பேருக்கு பாயும் புதிய வைரஸ்
நாட்டில் தற்போது பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியதென்றும் சுற்றாடலில் நீண்ட நேரம் நீடித்திருக்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளதென்றும் ஸ்ரீஜயவர்தன பல்கலைக்கழக மருத்துவ நிபுணர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார்.
மக்கள் கண்டிப்பாக முகக் கவசத்தை தொடர்ச்சியாக அணிவது கட்டாயமமென்றும் தெரிவித்தார்.
இந்த வைரஸ் இளையோரையும் பாதிக்கக்கூடியதெனவும், இந்த வைரஸ் ஒருவர் மூலம் சுமார் ஆறு பேருக்கு மிக வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது என்றும் தெரிவித்தார்.
இந்த புதிய கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்படுவோருக்கு கடுமையான நோய் அறிகுறிகள் வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.
வீதியில் பயணிக்கும் போது மட்டுமன்றி பணிபுரியும் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் மற்றவருடன் உரையாடுகையிலும் முகக்கவசத்தை கட்டாயமாகவும் முறையாகவும் அணிந்து கொள்வது முக்கியமென்றும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய தன்மை கொண்ட வைரஸ் முதலாவது இரண்டாவது அலை வைரஸை விடவும் பரவும் வேகம் அதிகம் கொண்டது.
இந்த வைரஸ் ஒருவர் மூலம் ஐந்து அல்லது ஆறு பேருக்கு மிக வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.