பிள்ளையான் வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்! புலனான 5 மனிதக்கொலைகள்

CID - Sri Lanka Police Pillayan
By Bavan Jun 15, 2026 03:05 PM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சு. ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மற்றும் பல மனிதக் கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் எனக் கூறப்படும் இருவர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று(15.06.2026) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், பிள்ளையான் கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பிள்ளையான் கைது : உச்சநீதிமன்றின் உத்தரவு

பிள்ளையான் கைது : உச்சநீதிமன்றின் உத்தரவு

ரவீந்திரநாத் கொலை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சு. ரவீந்திரநாத் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் மீது சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

பிள்ளையான் வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்! புலனான 5 மனிதக்கொலைகள் | More Shocking Information In The Pillayan Case

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து முக்கிய மனிதக் கொலைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டதாக CID தெரிவித்துள்ளது.

அவற்றில் 2006ஆம் ஆண்டு கல்லடியில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கப்பம் கோரப்பட்ட பணத்தை வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் பின்னணியில் TMVP உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டவை அடங்குவதாக கூறப்படுகிறது.

இந்த வழக்குகளுடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த முகமது சிபான் மற்றும் முகமது சகீத் ஆகியோரும் CIDயினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முன்னேற்றம் தொடர்பான விசேட அறிக்கை திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சிறையில் பிள்ளையானின் அறைக்கு அடுத்த அறையில் நடந்த சம்பவம்!

சிறையில் பிள்ளையானின் அறைக்கு அடுத்த அறையில் நடந்த சம்பவம்!

பாதுகாப்பு காரணங்கள்

பாதுகாப்பு காரணங்களால் பிள்ளையானை நேரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியவில்லை என CID தெரிவித்ததையடுத்து, அவர் இணையவழி (Zoom) மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டார்.

பிள்ளையான் வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்! புலனான 5 மனிதக்கொலைகள் | More Shocking Information In The Pillayan Case

மேலும், வழக்குடன் தொடர்புடைய ஒருவரின் மரணம் மற்றும் மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பது குறித்த தகவல்களும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டன. வழக்கை பரிசீலித்த நீதவான், பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில், பிள்ளையானின் நெருங்கிய ஆதரவாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் மீது ஏழு மனிதக் கொலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2022ஆம் ஆண்டு அக்கரைப்பற்று நீதிமன்ற ஆவணக் காப்பகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடனும் பிள்ளையான் தரப்பினருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுகளின் பேரிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் பிள்ளையானை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, மட்டக்களப்பு நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

பிள்ளையான் கைது விவகாரத்தில் ஞானசார தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

பிள்ளையான் கைது விவகாரத்தில் ஞானசார தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026