வெளிநாடொன்றில் கப்பல் மூழ்கியதில் 100க்கும் மேற்பட்டோர் மாயம்
தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (9) கப்பல் மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பத்து பேர் உயிரோடும் ஒருவர் சடலமாகவும் மீட்கப்பட்டதாக மலேசிய கடல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மியன்மாரின் புத்திடாவுங்கிலிருந்து சுமார் 300 குடியேறிகளுடன் புறப்பட்ட படகு மூழ்கிய மூன்று நாள்களுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. மேலும் பலர் கண்டுபிடிக்கப்படலாம் என்று வடக்கு மலேசிய மாநிலங்களான கெடா மற்றும் பெர்லிசின் கடல்துறை ஆணையத்தின் பணிப்பாளர்ர் முதல் அட்மிரல் ரோம்லி முஸ்தபா தெரிவித்தார்.
மியான்மார் முஸ்லிம்கள்
உயிர் பிழைத்தவர்களில் மூன்று பேர் மியன்மாரைச் சேர்ந்த ஆண்கள். இருவர் ரொஹிங்கியா ஆண்கள். ஒரு பங்ளாதேஷ் ஆடவரும் அடங்குர். ஒரு சடலம் ரொஹிங்கியா பெண்ணினுடையது என்று கெடா காவல்துறைத் தலைவர் அட்ஸ்லி அபு ஷாவை மேற்கோள்காட்டி பெர்னாமா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மியன்மாரில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
அதிகாரிகள்கண்டுபிடிக்காமல் இருக்க இரகசிய செயற்பாடு
மலேசியாவை நோக்கி பெரிய கப்பலில் அகதிகள் புறப்பட்டனர். எல்லையை நெருங்கியதும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்காக மூன்று சிறிய படகுகளுக்கு மாற அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு படகுகளிலும் சுமார் 100 பேர் ஏற்றப்பட்டிருந்தனர் என்று திரு அட்ஸ்லியைச் சுட்டிக் காட்டி ஊடகம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |