புனரமைக்கப்படாத பாடசாலை வீதி! போராட்டத்தில் குதித்த மூதூர் மக்கள்
Sri Lankan Peoples
NPP Government
By Dilakshan
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் பாரதிபுரம் கிராமத்திலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத்தருமாறு வலியுறுத்தி காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இன்று வெள்ளிக்கிழமை (09) காலை ஏற்பாடு செய்திருந்தனர்.
சுமார் 600 மீற்றர் தூரம் கொண்ட பாரதிபுரம் பாடசாலை வீதியானது பிரயாணம் மேற்கொள்ள முடியாமல் பள்ளமும்,குழியுமாக காணப்படுகிறது.
அரசியல்வாதிகளின் நடவடிக்கை
இதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தி பிரயாணம் மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் அசௌகரிகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது நல்ல அரசாங்கம் ஒன்று அமைந்துள்ளமையினால் அரசியல்வாதிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாடசாலை வீதியை புனரமைத்து தருமாறு மூதூர் -பாரதிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 8 மணி நேரம் முன்
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு!
1 நாள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி