உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு : 2023ன் கடவுச்சீட்டு தரவரிசை : முழு விபரம் உள்ளே
ஒவ்வொரு ஆண்டும் ஹென்லி கடவுசீட்டு இன்டெக்ஸ் உலகின் அனைத்து நாடுகளின் கடவுசீட்டுக்களின் தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
அதனை அடிப்படையாக கொண்டு, எந்த நாட்டின் கடவுசீட்டு மிகவும் சக்தி வாய்ந்த கடவுசீட்டு என்ற கணக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், 2023 ஆம் ஆண்டில் வலிமையான கடவுசீட்டு எது என்று இப்பதிவின் வாயிலாக காணலாம்.
முதலாவது இடம்
இந்த ஆண்டு சிங்கப்பூரின் கடவுசீட்டு முதலிடத்தில் உள்ளது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு சிங்கப்பூரின் கடவுச்சீட்டு என்பது தெளிவாகிறது. சிங்கப்பூர் குடிமக்கள் உலகில் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
இரண்டாவது இடம் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுசீட்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன் ஆகிய நாடுகள் ஜப்பானுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.
அதே நேரத்தில், இங்கிலாந்து கடவுசீட்டு 4ஆவது இடத்தையும், அமெரிக்காவின் கடவுசீட்டு 8ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இந்தியாவின் கடவுசீட்டு தரவரிசை ஏழு இடங்கள் உயர்ந்து 80வது இடத்திற்கு வந்துள்ளது.
பலவீனமான கடவுசீட்டுக்கள்
2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடவுசீட்டு 80 வது இடத்தில் உள்ளது. இந்தியாவுடன் டோகோ மற்றும் செனகல் ஆகியவை 80 வது இடத்தில் உள்ளன.
இந்த குறியீட்டின்படி, இந்தியா, டோகோ மற்றும் செனகல் ஆகிய நாடுகளின் கடவுசீட்டு பயனர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
அதேநேரம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பலவீனமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |