இங்கிலாந்தில் கோர விபத்து! ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலி
வடக்கு இங்கிலாந்தின் எல்லைக்குட்பட்ட வடக்கு நோர்த்ஷோர் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு நோர்த்ஷோரிலிருந்து தெற்கு ஸ்டைன்லி நோக்கிப் பயணமான இரண்டு அடுக்கு பேருந்து விபத்துக்குள்ளானதிலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது.
இப்பேருந்து ஏ 61 பாதையூடாக பயணமான வேளை, வீதி வளைவில் திரும்ப முயற்சித்த வேளை எதிரில் வந்த காருடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
மோதுண்ட காரில் பயணித்தவர்களுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படவில்லை என்றும் பேருந்து சாரதியும் சிறு காயங்குடன் உயிர் பிழைத்துள்ளதாகவும் நோர்த்ஷோர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலி
இந்தப் பேருந்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் அவரது ஆறு வயது மகன் மற்றும் 12 வயது மகள் உட்பட மூவர் விபத்தில் பலியானதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதிகரித்த வேகமே இந்த விபத்துக்கு காரணம் என்றும், கடந்த எட்டு நாட்களுக்குள் நிகழ்ந்த இரண்டாவது கோர விபத்து இது என்றும் கூறப்படுகிறது.
இதே போன்றே, கடந்த மாதம் 26ம் திகதி மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளிள் பயணம் செய்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குறிப்பிடபட்டுள்ளது.
இந்த விபத்தில் குறித்த குடும்பத்தை சேர்ந்த மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து குடும்பத்தை இழந்து நிற்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்
