கிளிநொச்சியில் வீடுகளை உடைத்துத் திருடிய தாய், மகன் கைது :மீட்கப்பட்ட பெருந்தொகை நகை மற்றும் பணம்
கிளிநொச்சி, இராமநாதபுரம் மற்றும் அக்கராயன் ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தாயும் மகனும் கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் சிக்கினர்
21½ பவுண் நகை, 10 இலட்சம் பணம் மீட்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 21 ½ பவுண் தங்க நகைகளும், பத்து லட்சம் (ரூ. 10,00,000) ரூபாய் ரொக்கப் பணமும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகனிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |