அரச பணியாளர்களுக்கு நிதி அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!
அரச பணியாளர்களின் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக 500 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரைவு - செலவுத் திட்டத்தை (Budged) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தனது உரையில்,
2014 இல் கள உத்தியோகத்தர்களினால் வழங்கப்படுகின்ற அரசாங்க சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றினை நாம் ஆரம்பித்தோம்.
இம் முன்னெடுப்பின் கீழ் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 381 கள அலுவலர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டதுடன் அவர்கள் தமது அரசாங்க சேவையினை வழங்குவதற்கு குறித்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதை இன்று நான் காணும் போது மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தினை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு நான் திட்டமிட்டுள்ளதுடன் அதன் நன்மைகளை அரசாங்க ஊழியர்களுக்கு மாற்றுகின்ற முறைமையொன்றினையும் செயற்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளேன்.
இதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.