மட்டக்களப்பில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறையில் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறை பாணமை குதியில் வைத்து காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் இன்று புதன்கிழமை(29.07.2026) தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த 2026.07.22 அன்று களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது.
பாணமை பகுதியில் கண்டுபிடிப்பு
களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்அனைத்த காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்த நிலையில் செவ்வாய்கிழமை(28.07.2026) குறித்த மோட்டார் சைக்கிளையும் அதனைக் களவாடிச் சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில் வைத்து பாணமை காவல்தறையினருடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 25 வயது மத்திக்கத்தக்கவர் எனவும், மோட்டார்சைக்கிளின் பெறுமதி சுமார் எட்டு இலட்சத்தது தொண்ணூறாயிரத்துக்கு மேல் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்
கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கைது
2026.07.22 அன்று களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து குறித்த நபர் மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று இலக்கத் தகட்டையும் மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தும்போது சரியான முறையில் பூட்டி, பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், கள்வர்கள் நடமாடுவதானால் அவதானத்துடன் செயற்படுமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |