வாகன திருட்டு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் இவ்வாறு திருடி செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் காவல்துறையினருக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள்
இந்தநிலையில், கடந்த எட்டாம் திகதி மற்றும் ஒன்பதாம் திகதிகளில் மாத்திரம் மேல் மாகாணத்தில் பத்து மோட்டார் சைக்கிள்களும் மற்றும் மூன்று முச்சக்கர வண்டிகளும் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளரும் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |