கல்கிசை துப்பாக்கிச் சூடு! அதிரடியாக கைது செய்யப்பட்ட கொலை கும்பல்
கல்கிசையில் கடந்த 15ஆம் திகதி இரவு நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற கூலிப்படை கும்பலுடன் தொடர்புடைய பெண் உட்பட நால்வரை பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு (CTID) இன்று கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் கூலிப்படை கொலையாளி, அவருக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 3.8 கலிபர் கைத்துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரகசியத் தகவல்
இதன்போது, கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், கொம்பனித்தெரு பகுதியில் பெண் உட்பட இருவரும், வத்தளைப் பகுதியில் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைக்காக கூலிப்படை கொலையாளிக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும், அவர்களுக்கு உதவிய பெண்ணுக்கும் மற்றவருக்கும் ஐஸ் போதைப்பொருளும் வழக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening