யாழில் சட்ட விரோதமாக மண் அகழ்வு: களத்திற்கு இளங்குமரன் எம்.பி அதிரடி விஜயம்
யாழில் (Jaffna) சட்ட விரோதமாக மண் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் (Karunananthan Ilankumaran) நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச பகுதியில் தற்பொழுது சட்ட விரோதமாக மண் விநியோகம் அதிகளவு இடம்பெற்று வருகின்றன.
இச் சம்பவம் தொடர்பாக பல முறைப்பாடுகள் மருதங்கேணி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்றும் அது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழல் தொடர்ந்துள்ளது.
வேண்டுகோள்
இந்தநிலையில், நேற்றைய தினம் (02) வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்ட வீடுகள் கையளிப்பு நிகழ்வுக்கு வருகை தந்த இளங்குமரன் ஊடகவியலாளரான பூ.லின்ரன் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக சட்ட விரோதமாக மண் விநியோகம் செய்யப்படும் இடங்களிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு சென்று மண் அகழ்வு செய்யும் பிரதேசங்களை பார்வையிட்டு இச் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி சென்றுள்ளார்.
நடவடிக்கை
அத்தோடு குறித்த பிரதேசத்தில் அருகாமையில் காவல் நிலையம் இருப்பதால் இந்த சட்ட விரோதமான செயற்பாடுகளில் காவல்துறையினருக்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கும் என தெரிவித்து அவர்கள் சம்பந்தமாகவும் உடனடியாக நடவெடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்ட விரோதமாக நடவடிக்கைகளை கட்டுபடுத்த பொதுமக்களும் தமக்கு உதவி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ் அதிரடி நடவடிக்கைக்கு தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரும் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் பத்து வட்டார உறுப்பினரும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
