ரணிலின் கால்களை தொட்டு வணங்கத் தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்
Ranil Wickremesinghe
Sri Lanka Fuel Crisis
Sri Lanka Fisherman
By Sumithiran
கடற்றொழிலுக்கு எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் மானியம் வழங்கினால் அதிபர் ரணிலின் பாதம் பணிந்து வணங்குவோம் என ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சி தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அநாதைகளாக கடற்றொழிலாளர்கள்

கடற்றொழில் அமைச்சு குறித்து பேசும் போது ஏமாற்றமும் வேதனையும் ஏற்படுவதாகவும் தற்போது கடற்றொழில் அழிக்கப்பட்டு கடற்றொழிலாளர்கள் அனாதைகளாகி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கடற்றொழிலின் வீழ்ச்சிக்கு எரிபொருள் பிரச்சினையே பிரதான காரணியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி