யாழில் சிறீதரன் எம்.பியை நேரில் சந்தித்த தொல்.திருமாவளவன்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தொல்.திருமாவளவன் நேற்று திங்கட்கிழமை சிவஞானம் சிறீதரனை அவரது யாழ். இல்லத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போதைய அரசியல் நிலைமைகள்
இதன்போது, வடக்கு, கிழக்கு மாகா ணங்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஈழத் தமிழ் மக்களின் தற்கால வாழ்க்கை நிலை, அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தொல்.திருமாவளவன் விரிவாகக் கேட்டறிந்து கொண்டார்

இதேவேளை யாழ்ப்பாணம் - செம்மணி படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அணையாவிளக்கு நினைவுத்தூபியில் நேற்று (16) மாலை இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |