ஜெலென்ஸ்கியின் பெரும் சாதனையை முறியடித்த மாலைத்தீவு ஜனாதிபதி
மாலைத்தீவு (Maldives) ஜனாதிபதி முகமது முய்சு ( Mohamed Muizzu) வரலாற்றில் மிக நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பிற்கான புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (04) அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.00 மணிக்கு தொடங்கிய ஜனாதிபதி முய்சுவின் ஊடகவியலாளர் சந்திப்பு, நள்ளிரவை கடந்து 14 மணி நேரம் 54 நிமிடங்கள் நீடித்ததாக மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜெலென்ஸ்கியின் சாதனை
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 2019 ஒக்டோபரில் 14 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் முந்தைய 7 மணி நேர சாதனையை முறியடித்திருந்தார்.
அதன்படி, மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலக அறிக்கையின் படி, முய்சுவின் ஊடகவியலாளர் சந்திப்பு, வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
அதன்போது, ஜனாதிபதி முய்சு ஊடகவியலாளர்களிடம்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், ஊடகங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட பொது கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
