முல்லைத்தீவில் இன்றும் மின்னல் தாக்குதல் -இளம் குடும்பஸ்தர் படுகாயம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
வேணாவில் கிராமத்தைச் சேர்ந்த 28 அகவையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மழைபெய்து கொண்டிருந்த வேளை வீட்டு முற்றத்தில் காணப்பட்ட கோடரியினை பாதுகாப்பாக எடுத்துவைப்பதற்காக குடைபிடித்துக்கொண்டு சென்றுள்ளார். இதன்போது முற்றத்தில் நின்ற வேப்பமரத்தில் மின்னல் தாக்கியுள்ளது இதன்போது குறித்த குடும்பஸ்தரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பிடித்துச் சென்ற குடையின்மீதும் மின்னல் தாக்கியுள்ளது.
வயிற்றிலும்,காலிலும் எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் அயலவர்களின் உதவியுடன் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினமும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழிந்துள்ளது.


