முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டது தடை

police mullaithivu court
By Sumithiran Nov 17, 2021 08:16 PM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி சரவணராஜா இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம் ஆகிய ஏழு காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையின் விண்ணப்பத்தின் அடிப்படையில் குறித்த 47 பேருக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி சரவணராஜா தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

முல்லைத்தீவு காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR /868/21 வழக்கினூடாக முல்லைத்தீவு காவல் நிலையபிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன்,சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா(கரன்),முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் ,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்),சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா , முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ,சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் ,நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,சமூக செயற்பாட்டாளர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டது.

 முள்ளியவளை காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/869/21 வழக்கினூடாக முள்ளியவளை காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பதினொரு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் திருச்செல்வம் இரவீந்திரன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கனகையா தவராசா, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், இரத்தினம் ஜெகதீஸ்வரன் , தவராசா அமலன் , சமூக செயற்பாட்டாளர்களான சுமித்கட்சன் சந்திரலீலா, காளிமுத்து சண்முகலிங்கம்,இராசசேகரம் இராசம்மா,பகீரதன் ஜெகதீசன், ஞானதாஸ் யூட்பிரசாத் ஆகிய பதினொரு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டது.

 ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/874/21 வழக்கினூடாக ஒட்டுசுட்டான் காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் மூன்று பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் ,சமூக செயற்பாட்டாளர்களான தர்மலிங்கம் ஜீவரத்தினம் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன்)உள்ளிட்ட மூன்று பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது

மாங்குளம் காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/872/21 வழக்கினூடாக மாங்குளம் காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் ஒன்பது பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா ,சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன், ரகுநாதன் துஷ்யந்தன் ,குஞ்சிதபாதம் ரவீந்திரன்,ராசமணி சிவராசா,மகாதேவன் ஆனந்த் ,சுப்பிரமணியம் பரமானந்தம் உள்ளிட்ட ஒன்பது பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/873/21 வழக்கினூடாக புதுக்குடியிருப்பு காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பதின்நான்கு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான கணபதிப்பிள்ளை விஜயகுமார்,கனகசுந்தரசுவாமி ஜனமேஜெயந், சிவபாதம் குகனேசன் ,சமூக செயற்பாட்டாளர்களான தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்), இசிதோர் அன்ரன் ஜீவராசா,பேதுருப்பிள்ளை ஜெராட்,தவராசா கணேஸ்வரன் ,சபாரத்ணம் யோகநாதன், ஜேசுதாசன் பற்றிக் யூட் ,வேலுப்பிள்ளை தியாகராசா , முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ,பதின்நான்கு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது

ஐயன்கன்குளம் காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/871/21 வழக்கினூடாக ஐயன்கன்குளம் காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா ஐயன்கன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுஜன்சன் சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துயன் ,சங்கரப்பிள்ளை நாகரத்தினம் ,காசிப்பிள்ளை கருணாகரன் ,கந்தசாமி சந்திரசேகரன்,தங்கராசா நிறஞ்சன் உள்ளிட்ட எட்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது

 மல்லாவி காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR/870/21 வழக்கினூடாக மல்லாவி காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மல்லாவி காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் ஏழு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் அருட் தந்தை நேசன் குலாஸ் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா,துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுஜன்சன் ,சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன்,தங்கராசா நிறஞ்சன் பத்மநாதன் ஸ்ரீகரன் ,மகாதேவன் ஆனந்த் , உள்ளிட்ட ஏழு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025