ஊடகவியலாளர் தாக்குதல் முல்லைத்தீவு கட்டளைத் தளபதியிடம் கோரப்பட்டுள்ள அறிக்கை!
attack
army
human rights
mulliyavalai
mulaitivu
By Kalaimathy
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவு 14 கீழ் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் முல்லைத்தீவு தலைமை காவல்துறையினர் பரிசோதகரிடமும் 59 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் சம்பவம் தொடர்பான அறிக்கை கோரப்பட்டுள்ளன.
மேலும் காயமடைந்த ஊடகவியலாளரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்