வெள்ளைக்கொடியுடன் தஞ்சமடைந்தவர்களை கொன்றுபுதைத்த சிறிலங்கா இராணுவம் - பரபரப்பு பேட்டி
தஞ்சம்பெறச் சென்றவர்களை கொன்று புதைத்து அதே இடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் இராணுவ முகாம்களை உருவாக்கினார்கள் என 2008 இறுதிப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர் ஒருவர் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
“வெள்ளைக்கொடியுடன் தஞ்சமடைந்த பிள்ளைகள் வவுனியா பக்கம் கொண்டுசெல்லப்படவில்லை. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இராணுவத்திடம் தான் எமது பிள்ளைகள் சரணடைந்தார்கள். அவர்களை இராணுவம் கொன்று விட்டதாக எண்ணுகிறேன்.
எமது பிள்ளைகள் புதைகுழிகளுக்குள் தஞ்சமடைந்து கிடக்கிறார்கள்.
தமிழீழத்தை அழிக்க வேண்டும் என்ற இனவெறியில் அந்தப் பிள்ளைகளை இராணுவம் கொலைசெய்திருக்கிறது.அவர்களை கொன்று புதைத்த புதைகுழிகளுக்கு மேல் இராணுவம் தமது முகாம்களை அமைத்திருப்பதாக” அந்த தாய் கூறுகிறார்.
அவர் லங்காசிறி ஊடகத்தின் மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு வழங்கிய முழுமையான பேட்டியின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.