புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்- சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படை!
police
army
mullaitivu
bomb
thannimurippu
By Kalaimathy
முல்லைத்தீவில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பிரதேசத்தில் வயல் நிலங்களை அண்மித்த பகுதியில் உள்ள வனப்பிரதேசத்திலேயே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவில் இன்று 10 ஆர்.பி.ஜி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு இன்று விசேட அதிரடிப் படையினர் அழைத்துச் செல்லப்பட்டு அப்பகுதியில் இருந்து பத்து ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த குண்டுகள் நீதிமன்ற அனுமதியுடன் தகர்த்தளிக்கப்படவுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.









10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்