முல்லைத்தீவில் நிவாரண நடவடிக்கையை ஆரம்பித்த ஐ.பி.சி தமிழ்...!
முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை நேற்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - அம்பலவன் பொக்கணை மற்றும் மாத்தளன் மக்களுக்கு இந்த நிவாரண நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பொதி
இந்நடவடிக்கையில், கரைத்துறைப்பற்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் கலந்து கொண்டு மக்களுக்கான நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்தார்.
அத்தோடு, கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர் களத்தில் இணைந்து இரவு வரை பணியாற்றியுள்ளனர்.
இதுமட்டுமன்றி, தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்ட ஏனைய இடங்களுக்கு அடுத்த கட்ட நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
மேலும், தமிழர் தாயகம் உட்பட நாடளாவிய ரீதியில் பெரும் வெள்ள அனர்த்தம் நிவாரணப்பணிகளில் ஐ.பி.சி தமிழ் உறவுப்பாலத்துடன் கரங்கோர்க்க விரும்புவோர் இணைந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










