நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால் மக்களை பாதுகாப்பது யார்... சாணக்கியன் ஆதங்கக் கேள்வி
நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால் நாட்டு மக்களின் நிலை என்ன என்பதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும்" என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நேற்றைய தினம் தமது பதவியிலிருந்து விலகி இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.
சிறிலங்கா நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகத்துக்கு சரவணராஜா இந்த கடிதத்தை கடந்த 23 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.
கொலை மிரட்டல்
இந்த சம்பவம் குறித்து சாணக்கியன் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், கொலை மிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி பதவி விலகி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டு மக்களின் நிலை என்ன என்பதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். என கேள்வி எழுப்பினார்.
சனல் 4 சூத்திரதாரிகள்
அதேவேளை, சனல் 4 இல் வெளியான தகவல்கள் குறித்து விசாரணை கோரி பதிவிட்ட பல இளைஞர்களுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ள போதிலும், சனல் 4 குற்றம் சாட்டியுள்ள ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு எதிராக எந்த வித விசாரணைகளும் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய செய்திகளை அறிந்து கொள்ள ஐபிசி தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் |