வனவள பாதுகாப்பு திணைக்களத்தினரால் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய விசேட கலந்துரையாடல்!
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கட்பட்ட குமுழமுனை மேற்கு கிராம சேவகர் பிரிவில் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினரால் எல்லைக்கற்கள் இடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் - வருகை தந்த பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட அரசாங்க அதிபர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றினை அமைத்து ஜனவரி 15ஆம் திகதி களவிஜயத்தின் பிற்பாடு முடிவெடுப்பதாக அறிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர், சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட வனவள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், கிராமிய அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags : #Mullaitivu #Landmark #People