முல்லைத்தீவில் காட்டிற்குள் வேட்டைக்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு!
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(14) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஆறுமுகத்தான் குளத்தினை சேர்ந்த 48 வயதான துரைராசா ஆனந்தராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில்
தண்ணிமுறிப்பு குளத்தினை அண்மித்த காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குறித்த நபர் காட்டிற்குள் பயன்படுத்திய சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவருடன் வேட்டைக்கு சென்றவர்களால் எடுத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் மற்றும் இவர் பயன்படுத்திய சட்டவிரோத துப்பாக்கி என்பன தண்ணிமுறிப்பு குளக்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |