கடவுளின் பெயரால் சாபமிட்டு மிரட்டிய கும்பல்- காவல்துறையின் உடனடி நடவடிக்கை!

arrest police mullaitivu religion oddusuddan
By Kalaimathy Nov 29, 2021 06:43 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

முல்லைத்தீவில் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த குழுவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கிழவன்குளம் கிராமத்தில் மதம் மாற்றச் சென்ற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர் தன்னை பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் காவல் நிலையத்தில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்து மாங்குளம் காவல்துறையினர் சந்தேக நபர்கள் மூவரை அவர்களது வாகனத்துடன் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கிழவன்குளம் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டுக்கு சென்று மதம் மாறாவிட்டால் ஆண்டவரின் சாபம் கிடைக்கும் என மிரட்டி மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டிலேயே 3 பேர் மாங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிழவன்குளம் பகுதிக்கு ஹயஸ் ரக வான் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் 27.11.2021 அன்று சென்ற ஒரு குழுவினர் அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று அவ்வீட்டு குடும்பஸ்தரை அழைத்து தமது மதத்திற்கு மாறுமாறு கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் குறித்த குடும்பஸ்தரை அங்கு சென்ற சபையைச் சேர்ந்தவர்கள் தரக்குறைவாக பேசியதுடன், கடவுளின் பெயரால் சாபமிட்டு அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர்.   

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கி மாங்குளம் காவல்துறையினர் மற்றும் 119 காவல்துறை ஆகியோருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் நேற்று அங்கு சென்று ஹயஸ் ரக வாகனத்தையும், அதில் சென்ற மூவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மாங்குளம் காவல்துறையினர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை கிழவன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக ஒரு சபைக்கூடம் அமைக்கப்பட்டு மதமாற்ற செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


GalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026