புலனாய்வாளர்களின் கண்காணிப்பின் மத்தியிலும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முல்லைத்தீவு ஊடக அமையம்!
முல்லைத்தீவு ஊடக அமையம் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைதீவு ஊடக அமையத்தின் திறப்பு விழா முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் தலைவர் கலாநிதி எஸ் ரகுராம், முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அலுவலக கட்டிடத்தினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்வில் யாழ் ஊடக அமைய நிறுவுணர் தயாபரன் மற்றும் வடக்கு மாகாணத்தின் ஊடக அமைப்புக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை நேற்றைய தினம் ஊடக அமைய கட்டிடத்தை சூழ இராணுவப் புலனாய்வாளர்கள் சிவில் உடை தரித்த காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் சிவில் உடை தரித்த காவல்துறையினர், நாளைய நிகழ்வு தொடர்பாகவும் யார் யார் வருகிறார்கள் எனவும் ஊடகவியலாளர்களிடம் விசாரித்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


























