நினைவுகூரல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசு: தமிழர் தரப்பு கண்டனம்

Trincomalee Sri Lanka Tamil
By Shalini Balachandran May 14, 2024 04:46 PM GMT
Report

நினைவுகூரல் உரிமையை மறுதலித்து மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

திருகோணமலையில் கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்களை காவல்துறையினர் அடாவடித்தனமாக கைது செய்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவத்திற்கு பலதரப்பிலிருந்து பலத்த கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பும் குறித்த சம்பவம் தொடர்பாக தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்! எச்சரிக்கை விடுத்த விக்னேஸ்வரன்

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்! எச்சரிக்கை விடுத்த விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் கஞ்சி

இது தொடர்பாக அவ்வமைப்பு மேலும் தெரிவிக்கையில், “திருகோணமலை மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றது நினைவு கூரல் என்பது ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமையாகும் அத்தோடு உலகளாவிய அனைத்து சர்வதேச சட்டங்களும் அதனை ஆழமாக வலியுறுத்துகின்றன.

நினைவுகூரல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசு: தமிழர் தரப்பு கண்டனம் | Mullivaikal Issues Condemnation Of Tamil Structure

இந்த நிலையில் திருகோணமலை சேனையூரில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் மிகுந்த வேதனையை ஒட்டுமொத்த தமிழ் மக்களிற்கும் ஏற்படுத்தி உள்ளது.

சொல்லணாத்துயர் வலி சுமந்த இந்த நாட்களில் தங்கள் உறவுகளை நினைந்து பிரார்த்திப்பதற்கு அந்த நாட்களில் அவர்கள் பட்ட துயரத்தை கஞ்சி பருகி உயிரை பிடித்திருந்த அவலத்தை நீள நினைந்து தாமும் கஞ்சி காய்ச்சி குடிப்பதும் பரிமாறுவதும் குற்றமாக அரச இயந்திரத்தால் பார்க்கப்படுவது இலங்கையில் 15 ஆண்டுகளாகியும் பேரினவாத மனநிலையில் மாற்றம் வராத கொடூர முகத்தின் வெளிப்பாடாகும்.

அத்துமீறும் காவல்துறை...! தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை

அத்துமீறும் காவல்துறை...! தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை

தமிழ் தேசிய கட்சிகள்

இது தொடர்ந்தும் இனங்களிற்கு இடையேயான நல்லெண்ணத்தை ஆழமாக பாதிக்கும் செயற்பாடாகும். புனிதமான கோவிலில் உறவுகளை நினைந்து கஞ்சி காய்ச்சிய பெண் பிள்ளைகள் உள்ளிட்டோரை அஜாரகமாக கைது செய்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது இந்த விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒருமித்து பாரிய எதிர்ப்பை வெளிக்காட்டி அரசின் கோர முகத்தை துகிலுரித்து அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நினைவுகூரல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசு: தமிழர் தரப்பு கண்டனம் | Mullivaikal Issues Condemnation Of Tamil Structure

தமிழ் தேசியம் பரப்பில் வாழும் மூத்ததலைவர் திருகோணமலையை தற்போதும் பிரதிநிதித்துவப்படுத்தும் .இரா.சம்பந்தன் அவர்களுடைய மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதும் பிணை கூட வழங்கப்படாமல் பெண்பிள்ளைகள் உள்ளிட்டோர் விளக்கமறியலில் இரு வாரம் வைக்கப்பட்டிருப்பதும் மனதை வருத்துகின்றது.

  உடனடியாக அனைத்து தமிழ்தேசிய சக்திகளும் இவர்களின் விடுதலைக்கு சகல எத்தனங்களை செய்ய வேண்டுவதுடன் அனைத்து முற்போக்கு மற்றும் உலகளாவிய சக்திகளதும் கவனத்தை ஈர்த்து அரசிற்கு அழுத்தத்தை பிரயோகித்து நினைவுகூரலுக்கான உரிமையை உறுதிப்படுத்துமாறும் வலிசுமந்த இந்த நாட்களில் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கின்றோம்.

உறவுகளை நினைவேந்தும் உரிமையை மறுத்து தமிழர்களைச் சீண்ட வேண்டாம்: அரசுக்குச் செல்வம் எச்சரிக்கை

உறவுகளை நினைவேந்தும் உரிமையை மறுத்து தமிழர்களைச் சீண்ட வேண்டாம்: அரசுக்குச் செல்வம் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி