கனடாவில் உருவாகும் ஈழத் தமிழின படுகொலை நினைவுத்தூபி
இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான நினைவுத்தூபி ஒன்றை கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிரம்டனில் அமைப்பதற்குரிய ஆதரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரம்டன் நகரசபையில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்குரிய அங்கீகாரம் ஏகமனதாக கடந்த வருடம் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் (2021) ஜனவரி 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதை அடுத்து அனைத்துலக மட்டத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியிருந்தது.
இந்த நிலையில், இச்சம்பவங்களின் முதலாம் ஆண்டு நினைவை மையப்படுத்தி செய்தி வெளியிட்ட ஒன்ராறியோ பிராந்தியத்தின் அரசியல் பிரமுகரும், ஒன்றாரியோ திறைசேரி சபையின் தலைவருமான பிரமீத் சிங் சக்காரியா பிரம்டனிலும் ஒரு நினைவுமையத்தை அமைப்பதற்குரிய தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.